Pages

Saturday, December 1, 2018

யோகி ராம்சுரத்குமார்


யோகி ராம்சுரத்குமார்


யோகி ராம்சுரத்குமார் (டிசம்பர் 11918 – பிப்ரவரி 202001). விசிறி சாமியார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஞானம் அடைந்த பின்பு, இறக்கும் வரை திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டினார். அரவிந்தர்இரமண மகரிசி, இராமதாசர் ஆகியவர்களை தமது குருவாக கொண்டவர்.
யோகி ராம்சுரத்குமார்
பிறப்புதிசம்பர் 11918
நர்தாரா (Nardara)
இறப்பு20 பெப்ரவரி 2001(அகவை 82)
மேற்கோள்’குருவிற்கு பணிவிடை செய்வதே உயர்ந்த தவமாகும்’




Image result for yogi ramsuratkumar in tamil



பொருளடக்கம்

  • 1ஞானம் அடைவதற்கு முந்தைய வரலாறு
  • 2ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு
  • 3நூல்கள்
  • 4மேற்கோள்கள்
  • 5மேலும் படிக்க
  • 6வெளி இணைப்புகள்

                               

    ஞானம் அடைவதற்கு முந்தைய வரலாறு

    வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார்.
    ராம்தத் குவார் - குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் உண்டு. குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். காசியில் ஓடும் கங்கை ஆற்றாங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தார்.
    வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் குருவைத் தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.
    ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், இரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி இராமதாசரிடமிருந்து பக்தி நெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

    ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு

    யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார். பின்பு திருவண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் முக்திஅடையும் வரை அருளிக்கொண்டிருந்தார்.                                                             

    நூல்கள்

    யோகி ராம்சுரத்குமார் பற்றி எழுதப்பட்ட நூல்கள் சில:
    • விசிறி சாமியார், ஆசிரியர்: பாலகுமாரன்
    • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம், ஆசிரியர்: பாலகுமாரன்
    • யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ், ஆசிரியர்: கவிஞர். தமிழ்க்குழவி, வெளியீடு: யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் அறக்கட்டளை ராம்நகர்.

பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்








No comments:

Post a Comment

பத்மநாபபுரம் அரண்மனை ( Padmanabhapuram Palace )

பத்மநாபபுரம் அரண்மனை                 பத்மநாபபுரம் அரண்மனை, என்ப து  தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள து  , கல்குளம் தாலுக்கா...